பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடற்றிரட்டு

மெளனம் இன்னதெனல். (15-12-04)


மோனமென்று முன்னோர் மொழிந்ததனைநாவுரையாத்
தானமென்று கூறல் தவறாகு - மோன
மனமொன்று நாடா வகைநிறுத்திக் காத்துத்
தினமின்பந் துய்த்தல் தெளி.

ஒரு சிவராத்திரியிற் சொல்லிய பாக்கள். (4-3-05)

என்னு ளிருந்தொளிரு மென்னறிவே யெத்திசையு
மன்னிநிற்கு மெவ்வுயிரும் வாழ்கவரு-ளென்ன
வருளினன்கா ணென்றா னறிவாக நிற்பான்
பெருமைதனை யெங்ஙனுரைப் பேன்.

நானென்ற நாமமுற்று நான்மறையி னுட்பொருளாய்த்
தானன்றி வேறில்லாத் தன்மையனாய் மோன
வறிவொளியாய் நிற்பானை யாளென்றே னெல்லா
மறிவறிவா யென்றா னவன்.

முடிமன் சி. முத்துசுவாமிப் பிள்ளைக்கு எழுதிய பாக்கள்.

திருக்குமரன் மாணடியைச் சிந்தித்து மேன்மேற்
பெருக்கமுறும் வாழ்நாளைப் பெற்றுச் - செருக்கின்றி
யன்பொடுவாழ் மைத்துனனே யார்வமுற வென்னையடைந்
தின்பமுடன் வாழ்வா யிவண்.

தினமுயிரைக் காத்தருளுஞ் செய்யதிரு மாலை
மனமதனுட் கந்தனுடன் வைத்துத் - தனநல்குஞ்
சுந்தரகாண் டம்படித்துத் தூயவருளைப்பெற்றுச்
சந்ததமும் வாழென்னைச் சார்ந்து

14