பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைத்துனனுக்கு எழுதிய பாக்கள்

தன்னிலையைக் காட்டி இதைச் சாற்றியதும் அல்லாமல் இன்னிலையே எந்நிலைக்கும் ஏற்றமென்றும் - இன்னி [லையில் சென்று நின்று மெய்யறத்தைச் செய்யென்றும் சொற் இன்றுவந்து சேர்வேன் இலம். [றனனால் உ தமது மைத்துனனுக்கு எழுதிய பாக்கள். மைத்துனக் கேண்மையே மெய்த்துணை என்றிவண் யாவரும் சாற்றும் மாவரும் வாக்கு நித்தமும் நிலைக்கும் உத்தம மெய்யென யானினி துணர்ந்திடு வானினி துவந்து பலபல செய்த நலமிகும் மைத்துன ! நின்னது வரவும் என்னவள் வரவும் என்மகார் வரவும் நன்மணம் எய்துக. என்னை இங் கனுப்பிய முன்னைய வினையும் யானிவண் இழைத்த கோனுயர் தவமும் நேற்றே முடிந்தன ; தேற்றே நின்னரும் தங்கையை இனியான் அங்குவந் துற்றவள் கவலைநோய் களிலொரு திவலையும் இலாது போக்குவேன் நலனெலாம் ஆக்குவேன் வலனெலாம் எய்துவேன் அறனெலாம் செய்குவேன் கடவுளின் நன்றெலாம் அடைகுவேன் என்றவட் கியம்பியே.யரு ய 4 49.