12 மெய்யறிவு ப-ரை:-சீர் உறையும்-புகழ்கள் தங்குகின்ற, ஈசன்-கடவுள், ஓர் உயிர் துன்பு உறவும்-ஓர் ஆன்மா துன்பத்தை அநுபவிக்கவும், ஓர் உயிர் இன்பு உறவும் மற்றோர் உயிர் இன்பத்தை அநுபவிக்கவும், செயல்-செய்தல், எவன் யாது காரணம் பற்றி? ஓரம்-பட்சபாதம், செயல்தானே-செய்தல்தானா, ஈசனது இயல்-கடவுளது இயற்கை? சீர் அளிக்கும் புகழ்களையெல்லாம் நல்கும், செம்மை-நடுவுநிலைமை, உயல் தானோ-தவறல்தானா,ஈசற்கு-கடவுளுக்கு, உவப்பு-சந்தோஷம்?
க-ரை:-நடுவுநிலைமை வாய்ந்த இறைவன் காரணமின்றி ஓர் உயிர் துன்பத்தை அநுபவிக்கவும் மற்றோர் உயிர் இன்பத்தை அநுபவிக்கவும் விதிக்க மாட்டான். அவ்வாறு விதிப்பது அவனுடைய திருவிளையாடல் என்பது தவறு. சிலர் துன்பத்தை அநுபவித்தற்கும் வேறு சிலர் இன்பத்தை அநுபவித்தற்கும் காரணம் அவரவரது கருமங்களே என்பது குறிப்பெச்சம்.
தான் மூன்றும் அசைகள்.
ஊழ்ப்படியா மென்னி ஐயர்ந்தோர்பான் மோக்கமொடு கீழ்ப்படியு மேற்படியும் கேட்டலெவன்?-காழ்ப்ப அறஞ்செயலா லாவதெவன்? அஃதொழித்து மிக்க மறஞ்செயலா லாவதெவன் மற்று? (௧௩)
அ-ம்:- ஊழ்ப்படி, ஆம் என்னின், மோக்கத்தொடு கீழ்ப்படியையும் மேல்படியையும் உயர்ந்தோர்