பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

மெய்யறிவு அ-ம்:- இங்கு விதிதன்னின் மிகுவலியது இல்லை ; அது சதி செயினும் வந்ததுதாக்கும் ; அதனை மதியால் அடல் கூடாது : என்று ஆன்றோர் உரைத்த இதனை விடல் எங்கன் எனின்.

ப-ரை :- இங்கு - இவ்வுலகில், விதிதன்னின்ஊழின், மிகுவலியது இல்லை-மிகுந்த பலமுடையது. இல்லை ; சதிசெயினும் - அதனைவிலக்க வஞ்சகம் செயி னும்;அதுஅவ்விதி.வந்து தாக்கும்- வந்துவருத்தும்; அதனை - அவ்விதியை, மதியால் புத்தியால், அடல் - வெல்லுதல், கூடாது-முடியாது ; என்று ஆன்னேர் என்று பெரியோர், உரைத்த இதனை-கூறிய இவ்வு ரையை, விடல்-நீக்குதல், எங்கன் எனின் - எவ்வாறு என்றால்.

க-ரை :- விதியை மாற்றும் திறமை மனிதனுக்கு உண்டென்றது சரி; ஆனல் ஆன்றோர் விதியானது மிக வலியுடையது; அதனை மதியால் வெல்லமுடியா தென்று கூறியிருக்கின்றனரே; அவ்வுரையைத் தள்ளுவது எவ்வாறு? என்றால்,

தான் என்பது அசை. இச்செய்யுளிற் கண்ட வினாவுக்கு விடை அடுத்தசெய்யுளில் வருகின்றது.

அவருரையி னுட்பொருளை யாதிமுன்பு சொல்வேன். தவறதெனக் கூறுபவர் தாழ்வர்.--புவியில் விதைத்தவிரை யெஃதஃதே மேல்விளைவும், சாரும் விதைத்தவினைன்ன பெஃகஃதே மேல்.