பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

மெய்யறிவு


ப-ரை:-இங்கு - இவ்வுலகில், வேல விதை- வேல (முள்மர) வித்து, மாங்கனியை - மாம்பழத்தை, மேவச்செய்யாது- (நாம்) அடையும்படி. செய் யமாட்டாது: அதுபோல் - அதுபோல, பாவவினை- பாவச்செயல், இன்பத்தை - இன்பத்தை, பார்க்கவி டாது-(நாம்) அடையவிடாது. ஆ-பசு, எருக்கிலை யின் பாலை- எருக்கிலையின் பாலை, ஈயாது - கொடாது: (அதுபோல), பெருக்கம் நல்கும் - (இன்பங்களுக்கு ஏதுவாகிய) ஆக்கத்தைக் கொடுக்கும், நல்வினை - நல்ல கருமம்,பின் துன்பம் ஈயாது- பின்னர் துன்பத்தைக் கொடாது.

க-ரை:- பாவகருமம் இன்பத்தைக் கொடுக்க மாட்டாது. புண்ணிய கருமம் துன்பத்தைக் கொடுக்கமாட்டாது.

மறவினையின் வித்திட்டால் வன்றுன் புறுமா
லறவினையின் வித்திட்டடா லாரின் - புறுமிந்
நியதிநிகழ் வூழிதனை நீக்கமுடி யாதென்
றியலறிந்தார் சொன்னா ரிவண்.(கஎ)

அ-ம் இவண் இயலை அறிந்தார் மறவினை யின் வித்தை இட்டால் வன் துன்பு உறும், அறளினை யின் வித்தை இ டால் ஆர் இன்பு உறும், இந்நியதி நிகழ்வே ஊழ், இதனை நீக்கமுடியாது என்று சொன்னார்.

ப-ரை:- இவண் - இவ்வுலகில்,இயல் அறிந்தார்- (விதியின்) இலக்கணத்தைத் தெரிந்தோர், மறவினை வின்-பாவகர்மமாகிய, வித்தை இட்டால்-விதையை விதைத்தால், வன் துன்பு உறும்-கொடுமையான துன்