பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

உடம்பை வளர்த்தல். கிகராய பொருள் இல்லை. (ஆதலால்) பன்னும் பிணி எஃதும்-வைத்திய நூலார் கூறும் வியாதி எதுவும், சாராது - அச்சரீத்திரத்தைப் பொருந்தாதவகை, ஊக்கிப்பரிந்து - மேன்மேலும் முயன்று வருந்தி, பேணி வளர்த்து-பாதுகாத்து வளர்த்து, என்றும் பணியுமாறு-(அஃது) எக்காலத்தும் உனது உத்தரவு களுக்குக் கிழ்ப்படியத்தக்க விதத்தில், ஆள் வாய்அதனை அடக்கி ஆள்வாய். க-ரை:- மனித உடம்பு பெறுதற்கரிய தொன் முதலின், அதனை எவ்வித வியாதியும் பொருந்தாத வாறு காத்து, வலிமையுறுமாறு வளர்த்து, உனக்குக் கீழ்ப்படியுமாறு அடக்கி ஆள்வாய், . ஆல் அசை. பூதமைந்துஞ் சேர்த்து பொருத்திவந்த வுன்னுடம்பில் வாதமன னீர்மூன்று மாணுடைய- வாத லியற்கையுள தாகாய மெஃதுளுமண் மூன்றன் செயற்கையான் மாறும் தினம். அ-ம்:- பூதம் ஐந்தும் சேர்த்து பொருந்தி வந்த உன் உடம்பில் வாதம் அனல் நீர் மூன்றும் மானுடைய ஆதல் இயற்கை ; ஆகாயம் எஃதுளும் உளது; மூன்றன் செயற்கையால் மண் தினம் மாறும். ப-ரை:- பூதம் ஐந்தாம்-ஆகாயம் வாயுதேயு அப்பு பிருதினி என்னும் ஐந்தும்,சேர்த்து பொருந்தி - கலந்து கூடியதால், வந்த உன் உடம்பில்