பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

உடம்பை வளர்த்தல், 25 கொன்; உன் நலத்தைப் போக்கும் பிறபொருள்களை என்றும் கொள்ளாய். பிணி உற்றால் பலபிணிகளைத் தீர்த்தாணைப் பார்த்துக் கொள்வாய், ப-ரை:- பின்னர்- உனது சரீரத்தில் அம்மூன் மனது நிலைகளை நீ அறிந்த பிற்பாடு, பதார்த்த குணம் - பதார்த்தங்களின் குணங்களைப்பற்றிக் கூறும் நூலை, ஈன்கு பார்த்து என்றாகப் படித்து, எற்பவற்றை - உனது சரீரத்திற்குப் பொருந்து இனவற்றை, ஓர்த்து உணர்ந்து-ஆராய்ந்து தெரிந்து, கான்றும் கொள்-எக்காலத்திலும் கொள்வாயாக ; உன் நலத்தை - உனது சரீர ஆரோக்கியத்தை, பேர்க்கும் - கெடுக்கும். பிறபொருள்கள் - மற்றைய பொருள்களை, என்றும் கொள்ளாய் ஒருபோதும்கொ ள்ளேல்; பிணியுற்றால்-வியாதி (உன்னை) உற்றால், பல பிணிகள் தீர்த்தானை -(பலர் கொண்ட) பலவியாதி களைத் தீர்த்த வைத்தியனை, பார்த்துக் கொன் வாய் தெரிந்து அவளிடம் மருந்து கொள்வாயாக, க-ரை :- சேத்தில் வாதம் பித்தம் சிலேத் பனம் என்னும் மூன்றில் எது மிகுத்து நிற்கிற தென்று தெரிந்து, பதார்த்தகுண நாலைப் படித்து, சரீரத்தில் மிகுந்து நிற்பதைச் சமப்படுத்தத் தக்க பதார்த்தங்களைக் கொள்க; அதிகப்படுத்தத் தக்க பதார்த்தங்களைக் கொல்லற்க; விபாதி யுற் மூல் பல வியாதிகளைத் தீர்த்தி ; அ.ம பலம் முதிர்ந்த வைத்தியனத் தெரிந்து உடனே மருந்து கொள்க.