பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

உடம்பை பார்த்தல். 27 போடு கடவுளைத் தியானித்து, அற நூல்களைக் கற்று, சிலம்பப் பயிற்சிகளைச் செய் காலையிலே மாவேறிக் காதவழி சென்றுவந்து சோலையிலே சற்றிருந்து சோர்வகற்றிப் பாலினெய்யிலட்டவுண வுண்டுதயத் தப்பாலுன் வேலைகளைத் திட்டப் படிநன்கு செய். (உ.எ) அ-ம் :- காலையில் மாமேல் ஏறிக் காதவழி சென்று வந்து, சோலையில் சற்று இருந்து சோர்வை அகற்றி, பாலிலோ நெய்யிலோ அட்ட உணவை உதப்பத்து உண்டு, அப்பால் உன் வேலைகளைத் திட்டப்படி நன்கு செய், ப- ரை :- காலையில் - அதிகாலையில், மா ஏறி- குதிரைமீது எறி, காதவழி-ஏழரை நாழிகைத் தூரம், சென்று வந்து - சவாரி செய்து போய்த் திரும்பி வந்து, சோலையில் நன்மலர்க்காவில், சற்று. சிறிது நேரம், இருந்து தங்கி, சோர்வு அகற்றி. களைப்பை நீக்கி, பாலில் நெய்யில் அட்ட. பாலிலாவது நெய்யிலாவது சமைத்த, உணவுஉணவை, உதயத்து உண்டு. சூரிய உதய நேரத்தில் உட்கொண்டு, அப்பால் - பின்னர், உன் வேலைகளை - உனது லௌகிகத்தொழில்களை, திட்டப்படி குறித்த அளவு, நன்கு செய்- திருந்தச் செய். க-ரை :- அதிகாலையில் குதிரைச்சவாரி செய்து வந்து, பூஞ்சோலையில் தங்கி வெயர்வையை நீக்கி, சூரிய உதய சமயத்தில் பாலிலாவது நெய்யிலாவது