பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உடம்பை வளர்த்தல். 29 முதல் இரண்றைFrd ஊறிய நீரைவிலக்கி மூன்றாம் முறை ஊறிய நீரை உட்கொண்டு, வேலைகளைக் கண்டிருப்பாய் - மற்றவர் செய்யும் உனது வேலைகளைங் பார்த்துக்கொண் டிருப்பாயாக.

க-ரை:-பகல் பதினைந்து நாழிகைக்கு முன் சுத்த ஜலத்தில் ஸ்நானம் செய்து, புதிதாகச் சமைக்கப்பட்ட பச்சரிசிச் சாதத்தைப் புதிதாகச் செய்யப்பட்ட கறிகளோடும் புதிதாக உருக்கப் பட்ட நெய்யோடும் முதல் நாள் பாலில் உறைக்கப்பட்ட தயிரோடும் சேர்த்து உண்டு, ஓர் இடத்தில் அமர்ந்து, வெற்றிலை பாக்கு முதலியவற்றைச் சுவைத்து, அவற்றில் ஊறுகின்ற ஜலத்தில் முதல் இரண்டு முறை ஜலத்தை உமிழ்ந்து விட்டு மூன்றாம் முறை ஊறும் ஜலத்தை உட்கொண்டு, (மற்றையவற்றை உமிழ்ந்து விட்டு) பிறரால் செய்யப்படும் உனது வேலைகளைப் பார்வை யிடு.

வாழ் என்பது வெந்நீரை விலக்கி நின்றது. புதிய என்பது முந்திய பொழுதுகளில் சித்தப்படுத்தப்பட்ட நெய் முதலியவற்றை விலக்கி நின்றது. செய்யுளுக்கு இயைந்தவாறு கறி,நெய், என்பவை முன் பின்னாக மாற்றி வைக்கப்பட்டன. கண்டிருப்பாய் என்பது கடுமையான வேலைகளை விலக்கி நின்றது.

மாலை மலங்கழித்து மாணீசன் றாடொழுது காலத்து நாழிகைக்கு ணன்கட்ட பாலினெய்ரிற் . கோதுடைசேர்த் துண்டு குறுநடைபின் கொண்டு துயின் மாதுமயிக் கோர்கான் மருவு............ (௨௯)