பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

மெய்யறிவ. மேவிடுதல்' முன்னும் சேர்க்கப் பட்டது. நல்லுயிரை நல்வினையை நற்பொருளைக் காத்தற்குச் சொல்லியவெல் லாஞ்செயினும் தோடமிலை யல்லாமல் தீயுயிரைத் தீவினையைத் தீப்பொருளைக் காத்தற்காங் காயவெலாம் பாவ மறி. (இஎ) அ-ம் :- செய்யுள் நடைபே அநுவய நடை. ப-ரை:--நல் உயிரை உயிர்களுக்கு நன்மையைப் புரியும் உயிர்களையாவது, நல்வினையை - உயிர்களுக்கு நன்மையை விளைக்கும் செயல்களையாவது, நல்பொ ருளை-உயிர்களுக்கு நன்மையை விளைக்கும் பொருள் களையாவது, காத்தற்கு பாதுகாக்கும் பொருட்டு, சொல்லிய எல்லாம் மேற்சொல்லிய பஞ்சமா பாத கங்களை யெல்லாம், செய்யினும் செய்தாலும், தோ டம் இலை குற்றம் இல்லை. அல்லாமல்- இவ்வாறல் லாமல், தீஉயிரை-உயிர்களுக்குத் தீமையைப் புரியும் உயிர்களையாவது, தீ வினையை-உயிர்களுக்குத் தீமை களை விளைக்கும் செயல்களையாவது. தீப்பொருளைஉயிர்களுக்குத் தீமைகளை விளைக்கும் பொருள்களை யாவது, காத்தற்கு பாதுகாக்கும் பொருட்டு, ஆய எல்லாம் செய்யப்பட்ட செயல்கள் எல்லாம், பாவம்பாவமாகும். அறி- இதனை நன்றாக அறிவாயாக. க-ரை:--நல்ல உயிர்களையாவது நல்ல வினை களையரவது நல்ல பொருள்களையாவது காத்தற்குச் செய்யும் பாவச் செயல்களும் புண்ணியச்சொல் களாம். தீய உயிர்களையாவது தீய வினைகளையாவது தீய பொருள்களையாவது காத்தற்குச் செய்யும் புண்ணியச் செயல்களும் பாவச் செயல்களாம்…………………