பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெயயறிவு. இங்கு-இவ்வுலகில், ஆகாத செய்யும்-தீயச்செயல்க ளைப் புரியும், பொருள் ஆதி பால்படுத்தல்-பொருள் களிடத்தும் உயிர்களிடத்தும் செலுத்துதல், போத மருளாகும் - அறிவின் மயக்கமாம். மெய்யறிவில்-கடவுள் ஞானத்திலும், நல் நெறியில்- அற வழிகளி லும், மேம்பாட்டில் - சிறப்பிலும், ஆசையின்மை - விருப்பம் இல்லாமை, பொய் அறிவில் ஆய புரை - விபரீத ஞானத்திலிருந்து உண்டாய குற்றமாம். க-ரை:- அருள் முதலிய நான்கையும் தீமை களை விளைக்கும் உயிர்களிடத்தும் பொருள்களிடத் தும் உபயோகித்தல் மடமை. மெய்ஞ்ஞானத்திலும் அறத்திலும் சிறப்பிலும் ஆசையில்லாதிருத்தல் குற்றம். இஃது ஒரு புறனடை கண்விழித்த நேரமுதற் கண்டுயிலு நேரம்வரை கண்ணளவுக் கெட்டுகின்ற காட்சிக்கு - னுண்ணுயிரு முன்செயலால் வேறுயிரா லூணின்மையாற்பகையின் வன்செயலால் வாடவிடாய் மற்று. (சுஅ ) அ-ம்:-- செய்யுள் நடையே அநுவய நடை. ப-ரை :- கண் விழித்த நேரம் முதல் - (நீ)காலை யில் நித்திரை நீங்கி எழுந்திருந்த நேரம் முதல், கண் துயிலும் நேரம்வரை-நீ இரவில் நித்திரைக்குச் செல்லும் நேரம் வரை, கண் அளவுக்கு- கண்பார்வைக்கு, எட்டுகின்ற காட்சிக்குள் - தெரிகின்ற எல்லைக்குள், நான் உயிரும் - (ஈ எறும்பு முதலிய) அற்ப உயிர்க