பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

          தவஞ்  செய்தல்.
  இன்னத வற்றை இனிய முலத்தோடு செவ்விது ஏற்றிடல் ; மெய்யை உள்ளித் தனியிருத்தல் ;  (இம்) மூன்றும் தவம்.

ப-ரை :- இவ்வுலகில் - இப்பூ உலகில், வாழ் கிண்ற-உடம்போடு கூடி நிற்கின்ற, எவ் உயிர்க்கும். தீய உயிர்களுக்கும், எவ்வித இன்னங்கும்-எவ்வகைத் துன்பத்தையும், எஞ்ஞான்றும் - எந்நாளிலும், இயற்றாமை - செய்யாமை ; இன்னை - துன்பங்களை, இனிய முகத்தோடு - மலர்ந்த முகத்தோடு, செவ் விது ஏற்றிடல்- இனிது கொள்ளல்  ; மெய் உள்ளி - மெய்ப்பொருளைத் தியானித்துக் கொண்டு, தனி இருத்தல்- தனிமையாக இருத்தல் ; மூன்றும் தவம்இம்மூன்றும் தவமாம்.

க-ரை:- உடம்போடு கூடி வாழ்கின்ற எவ்வு யிர்க்கும் எவ்வகைத் துன்பமும் செய்யாமையும், தன் பரில் வரும் துன்பங்களை யெல்லாம் சந்தோஷத் தோடு கொள்ளுதலும், கடவுளைத் தியானித்துக் கொண்டிருத்தலும் தவமாகும்.

தியானத்திற்குத் தனித் திருத்தலே உத்தமமா தலால் 'மெய்யுள்ளித் தனியிருத்தல்' என்று கூறப் பட்டது. 'எவ்வுயிர்க்கும்' எஞ்ஞான்றும்' என்று கூறப்பட்டதால் தற்காப்பு நிமித்தம் பிற உயிர்களுக் குத் தீங்கு புரிதலும் விலக்கப்பட்டது. இம்மூன் றிலொன்று செயி னெய்துங்காண்மற்றிரண்டு மிம்மூன்றுஞ் செய்துவரு வேமாயி-னம்மூன்று