பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மெய்யறிவு. ஆதிவழி வந்துரிற்கு மாருயிர்கள் தம்முள்ளே சாதிமத வேற்றுமை தான் சார்வதெங்கன்?--ஆதி ஒருவனென்ப தெல்லோர்க்கு மொத்தமுடி வென்றால் வருவதெங்ஙன் வேற்றுமைதான் மற்று? (எடு) அ-ம் :- ஆதியின் வழியாக வந்து நிற்கும் ஆர் உயிர்கள் தம்முள் சாதி மத வேற்றுமை சார்வது எங்கன் ? ஆதி ஒருவன் என்பது எல்லோர்க்கும் ஒத்தமுடிவு என்றால் வேற்றுமை வருவது எங்கன்? ப-ரை:-ஆதிவழி-மெய்ப்பொருளின் மூலமாக, வந்து நிற்கும் தோன்றி நிற்கின்ற, ஆர் உயிர்கள் தம்முள் - அருமையான உயிர்களுக்குள், சாதிமத வேற்றுமை-சாதி பேதமும் மத பேதமும், சார்வது எங்ஙன்-வந்து பொருந்துவது எவ்வாறு? ஆதி-கட வுள், ஒருவன் என்பது - ஒருவனே என்பது, எல்லோர்க்கும் சகல சாதியார்களுக்கும் சமயத்தார்களுக் கும், ஒத்த முடிவு என்னால் பொருத்திய சித்தாந்தம் என்னின், வேற்றுமை - அவ்வுயிர்களுள் சாதி மத வேற்றுமைகள், வருவது எங்ஙன்-வந்து பொருந்து வது எவ்வாறு? க-ரை :- உலகத்திலுள்ள பலவகை உயிர்களும் கடவுளிடத்துத் தோன்றியவை யென்பதும் கடவுள் ஒருவனே என்பதும் எல்லோர்க்கும் ஒத்த முடிவு கள். அவ்வாறிருக்க, அவ்வுயிர்களுள் சாதி பேதம் மத பேதம் உண்டென்று கூறுதல் பிழையே பன்றிப் பிறிதன்று.