________________
தவஞ் செய்தல். 79 ஈற்கு ஒவ்வொரு தாம். முயற்சி செய். க-ரை :- உயிர்களுக்குத் தீங்கிழையாமையும் காரமில்லாமையுமாகிய ஒழுக்கமே கடவுளை அடை தற்கு மார்க்க மென்றும், உயிர்களுக்குத் தீங்கிழை த்தலும் காமத்தைக் கொள்ளுதலுமாகிய இழுக் கமே கடவுளை விட்டுப் பிரிக்கும் மார்க்கமென்றும், ஆசிகமத நூல்கள் அனைத்தும் கூறுதலால் அவ்வொ ழுக்கத்தை நன்கு உணர்ந்து உன்னிடம் சேர்ப்பதற்கு எஞ்ஞான்றும் முயல்வாயாக. இவ்வுலகிணிற்கின்ற வெவ்வுயிகு மீசன் மக வெவ்வுடலு மீசனில மென்றெண்ணி--யெவ்வுயிர்க்கு மூறொன்றஞ் செய்யா அயர்வடைவாய் மெய்சேர்க்கு மாறென்று காண்பாயது. அ-ம் :- இவ்வுலகில் நிற்கின்ற எவ்உயிரும் ஈச னது மக, எவ்உடலும் ஈசனது இலம், என்று எண்ணி என் உயிர்க்கும் ஊறு ஒன்றும் செய்யாது உயர்வை அடைவாய்; அது மெய்யோடு சேர்க்கும் ஆறு என்று , காண்பாய். பரை:- இவ்உலகில் இவ்வுலகத்தில், விற்கின்ற. - உடம்போடு கூடி வாழ்கின்ற, எவ்உயிரும்-சகல உயிர் களும், ஈசன் மக-கடவுளது குழந்தைகள், எவ் உட லும் உயிரோடு கூடிய சகல சரீரங்களும், ஈசன் இலம்கடவனது வீடுகள், என்று எண்ணி-என்று நினைத்து, எவ் உயிர்க்கும் யாதாம் ஓர் உயிர்க்கும், ஊறு ஒன்றும் செய்யாது-தீங்கு சிறிதும் புரியாது, உயர்வு அடை