பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

         மெய்யறிவு.

முதல் அதிகாரம் - தன்னை யறிதல். தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியென முன்னையவர் நன்கு மொழிந்திருந்து-மென்னைகொல்? தன்னை யறியாது சார்த்தபல கண்டறியப் பின்னையவ ருன்னல் பிடித்து.

அநுவயம் :----தன்னை அறிதலே தலைப்படுத்தும் கல்வியென முன்னையவர் நன்கு மொழித்திருந்தும், தன்னை அறியாது, சார்ந்த பலவற்றைப் பிடித்துக் கண்டறியப் பின்னையவர் உன்னல் என்னை ?

பதவுரை :- தன்னை அறிதல்-தனது இலக்கணங்களைத் தெரிந்துகொள்ளுதலே, தலைப்படுத்தும்-மேம் பாடுறச்செய்யும், கல்வியென-படிப்பு என்று, மூன்னையவர்-முன்னோர், நன்கு மொழிந்திருந்தும் தெளிவாகக் கூறியிருந்தும், தன்னை அறியாது- தனது இலக்கணங்களைத் தெரிந்துகொள்ளாது, சார்ந்த-(தம்மை) அடுத்த, பல-பல உலக விவகாரங்களை, பிடித்துபற்றி, கண்டறிய- ஆராய்ந்து தெரிய, பின்னையவர். இக்காலத்துள்ளேர். உன்னால் கண்ணல். என்னையாது காரணம் பற்றி?