________________
மெய்யறிவு. எப்பொழுதும் - risலங்களிலும், எசும்-கமே. அப்பொருளை - கடவுளை, செப்பமுடன் பேணின்(6) ஒழுக்கத்தோடு க.டி நின்று தியானிப்பாயாயின். இவண்- இவ்வுலகத்திலேயே, இப்பொழுதே- இக்க ணத்திலேயே!. அறம் ஆதி கான்கும்-அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கும், உனைச் சேரும்-உன் பால் வந்து பொருத்தும். க-ரை :--எவ்வெவர் எவ்வெப்பெயர்களால் கட வுளை அழைப்பினும், எவ்வெவர் எவ்வெவ் விலக்கணங் களைக் கடவுளுக்கு ஏற்றினும், கடவுள் எப்பொழு தும் ஒருவரே. நீ ஒழுக்கத்தோடு நின்று கடவுளைத் தியானித்து வருவாயாயின் இவ்வுலகத்திலேயே இக் கணத்திலேயே புருஷார்த்தமாகிய நான்கையும் ரீ அடைவாய். தான், காண், அசைகள். மெய்யுணர்தல். தெரிய மெய்ப்பொருளே யுன்பொறியின் முன்னுலக மாதலன்றி வேறுலகென் றியாதுமிலை - யோது முலகினா தாரமதா வுள்ள பொரு ளன்றி பிலை வேறு மெய்ப்பொருளென் றெண். (அக) அ-ம்:--ஓது அரிய - மெய்ப்பொருளே உன் பொறியின் முன் உலகம் ஆதல் அன்றி உலகு என்று வேறு யாதும் இல்லை ; ஓதும் உலகின் ஆதாரம் தாக உள்ள பொருள் அன்றி மெய்ப்பொருள் என்று வேறு இல்லை. (இவ்வுண்மையை) எண்.