பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

84 மெய்யறிவு ப-ரை:- காவலில் நீர் பொலும்-ரானன் கண்ணே ஜலம் தோன்றுவது போலும், கயிற்றில் அராப் போலும்- கயிற்றின் கண்ணே பாம்பு தோன்றுவது போலும்,மெய்யில்-மெய்ப்பொருளிடத்தில் , உலகு ஆனது என்று - உலகம் தோன்றுகின்றது தென்று, இங்கு அறைவர் - இவ்வுலகில் (ஆன்றோர்) கூறுவர். காவல் கயிறு அடுக்க-கானலையும் கயிற்றையும் சமீ பிக்க, அவ்விரண்டும் காணல் போல்-கானலும் கயி றும் தெரிதல் போல, ஞானம் அடுக்க-ஞானத்தைச் சமீபிக்க, அது உலகானது - மெய்ப்பொருள் உலக மாகத்தோன்றியது, நன்கு காணும்-நன்கு தெரியும். க-ரை:- கானல் ஒளியினது சம்பந்தத்தால் நீர் போலத் தோன்றும்; கயிறு இருளினது சம்பர் தத்தால் அரவு போலத் தோன்றும்: இவ்வாறே, மெய்ப்பொருள் பொறிகளின் சம்பந்தத்தால் உல கம் போலத் தோன்றும். கானலுள்ள இடத்தை நெருங்கிய போது, முன்னர் நீர்போலத் தோன்றி யது கானலே எனத் தெரியும்; கயிறுள்ள இடத்தை நெருங்கிய போது, முன்னர் அரவுபோலத் தோன்றி யது கயிறே எனத் தெரியும்: இவ்வாறே, ஞானத்தை நெருங்கியபோது, முன்னர் உலகம்போலத் தோன்றி யது மெய்ப்பொருளே எனத் தெரியும். கானல் சுயிறிரண்டுங் காணுங்கா னீரரவு போனபடி. மெய்காணப் போமுலகு-நானன் கயிறுண்மை சோரவவை காணுமுல செய்து மெயிலுண்மை சோர விரைந்து. (அங)