பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x


" இப்புத்தகத்திலுள்ள பாக்கள் சிறந்த தமிழ்நடையில் இயற்றப்பட்டிருப்பதுடன் மனத்தை உருக்கத்தக்கவையாயும் தேசாபிமானம் நிறைந்தவையாயும் இருக்கின்றன. இப்பாக்களிற்சில மிக மிக உயர்ந்த தமிழ் இலக்கியங்களின் பாக்களுக்குச் சமமாயிருக்கின் றன,"—பிரஹ்மஸ்ரீ. இராஜகோபாலச்சாரியாரவர்கள், ஹைகோர்ட்டு வக்கீல், சேலம்.

“நமது தேசாபிமானியாகிய ஸ்ரீ மாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் பல சமயங்களில் பாடிய பாடற்றிரட்டு மனித சமூகத்திற்கு அவசியம் வேண்டுவனவாகிய ஈகை, அன்பு, உண்மை முதலியவைகளையும், ஊழின் வலிமை இத்துணைத் தென்பதையும், அவ்வூழையும் மெய்ம்முயற்சியினால் வென்று விடலாமென்பதையும், துன்ப மென்று சொல்லப்படுவன அனைத்தையும் இன்பமென்று நினைக்கின் அவை அக்கணமே' இன்பமாக மாறிவிடுமென்பதையும், கடவுளையும் ஆன்மாவை யும் பற்றி மனிதர் அறியவேண்டிய அநேக விஷயங்களையும் இனிய தமிழ்நடையில் தெளிவாகக் கூறுகின்றது. இந்நூலை நமது நாட்டார் வாங்கி வாசித்து மேம்படவேண்டுமென்று யான் கோருகிறேன்."—சேஷாத்திரி அய்யங்கார், தமிழ்ப்பண்டிதர், பாதூர்.

"நமது தேசாபிமானத் தலைவரும், மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவரும், பொதுமறையின் தற்கால உரையாசிரியருமாகிய ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்களது பாடற்றிரட்டு நமது மதாச்சாரியர்களும் தமிழப்பண்டிதர்களும் - வாசிக்கத்தக்க பல அரிய விஷயங்களையும் ஒரு பெரிய நூலிற்குரிய பல சிறப்புக்களையும் கொண்டுள்ளது. இதனைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கைக்கொண்டு கற்கவேண்டு மென்பதும் இது நிலவுலகில் நீடுநின்று நிலவ வேண்டுமென்பதும் எனது கோரிக்கை."— ஸ்ரீ சகஜாநந்த சுவாமியவர்கள், சென்னை


அகமேபுறம்.

இதனைப்பற்றிய மதிப்புரைகளிற் சில:—

"இந்நன்னூல் மிஸ்டர் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் இயற்றப் பெற்றுள்ள ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாம். மொழிபெயர்ப்பாசிரியர் தேசாபிமானியென ஜெகஜோதியாய்