xi
விளங்குபவரும் நம் நட்பிற் கோர் வைப்பனை யாரும் ஆங்கில திராவிட வித்வத்சிகாமணியுமாகிய ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள். சில பல ஆங்கிலமொழிபெயர்ப் பாசிரியர் களைப்போலப் பாதி யாங்கிலமும் பாதித் தமிழுமாகக் கலந்தெழுதாமல் தனித் தமிழ் நூலென்று கூறும்படி செந்தமிழ்த் தெளிமொழித் தொடரில் பெரிய விஷயத்தை மிக எளிதாக யாரும் அறிந்து பயன்படும் வண்ணம் நமது ஸ்ரீமாந் பிள்ளையவர்கள் மொழிபெயர்த்திருப்பது பாராட்டிப் பரவத்தக்கது. இந்நூலுக்குமுன்னும் நமது கனம் பிள்ளையவர்கள் மனம் போல வாழ்வு என்னும் அரிய நூலை (மொழிபெயர்த்துத்) தமிழுலகம் களிக்குமாறு வெளியிட்டுதவியிருக் கிறார்கள். நமது பிள்ளையவர்கள் அருமையும் பெருமையுமான நூல் களைத் தமிழுலகத்துக்கு உதவிவரும் உரிமை பெற்றிருத்தற்கேற்ப இவ்வழகிய நூலும் அவர்கள் மொழிபெயர்ப்புக்கிலக்காகி விளங்குதல் நமது தமிழ் மக்களனைவருக்கும் பெருமகிழ்ச்சி விளைக்குமென்பது உண்மையிலும் உண்யையாம். நமது ஆண்பாலார் பெண்பாலார் யாவருக்கும் வேண்டிய அரிய நூல் இதுலாதலால் இதைத் தருவித் துப்படித்துப் பயன் பெறுவாராக, —நீலலோசனி, நாகை.
"இந் நூலை யான் வாசித்தேன். படித்த இந்தியர்கள் பொது ஜனங்களுக்குச் செய்யவேண்டிய மிகமிக முக்கிய கடமைகளுள் ஒன்று மேல்நாட்டு நூல்களிற் சிறந்தவற்றை யெல்லாம் சுதேசபாஷைகளில் மொழிபெயர்த்துக் கொடுப்பதே. ஸ்ரீமாந் சிதம்பரம்பிள்ளை யவர்கள் தமது இக்கடமையை ஜேம்ஸ் ஆலனது நூல்களை மொழிபெயர்த்தலாற் செய்து கொண்டிருக்கின்றார்கள், பிள்ளையவர்களது முயற்சி நன்றாகவே முடிந்திருக்கிறதென்று யான் நினைக்கிறேன், இந்நூல் சாதாரணக் கல்வியுள்ள தமிழர்களும் உணரத் தக்கலாறு இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது,' இது பலராலும் வாசிக்கப்பட்டு மதிப்புப் பெறுமென்று யான் நம்புகிறேன். கலாசாலைகளில் இந்தலை ஒழுக்கப்பாடப் புத்தக மாக ஏற்படுத்தலாம் அல்லது உபயோகிக்கலாம் என்று யான் நினைக்கிறேன்,"—பிரஹ்மஸ்ரீ. ப. வே. நரசிம்ஹ அய்யரவர்கள், சென்னை சட்டசபை அங்கத்தினர், சேலம்.