பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

ஏறுமா றாகி நடக்கின், அந்தோ!
அவரது வாழ்வு புவிமிசை மிக்க
பொன்னுடைத்தேனும் பொருளுடைத் தேனும்
புகழுடைத்தானும் இகழுடைத் தாகி
விழலுக் கிறைத்த நீரொக் கும்மால்.
அத்தகை மனையுடன் ஒத்துவாழ் தலினும்
அவ்வறம் துறந்த அவ்வறம் புகுதலே
நன்றென அறிஞர் என்றும் அறையினும்
அதனை யுணரா தவமே புரிவர்
புவியி லுள்ள புல்லறி வாளர். ௩௰
அங்ஙன மன்றி அமிர்த வசனியாய்,
இரவலர்க் கெல்லாம் இனியதா யாகி,
கணவன் சொல்லைக் கடவா தவளாய்,
அவன் உயி ராகவும் அவள் உடலாகவும்
அவன்நினை யாவும் அங்ஙன் இயற்றி,
நாணம் மடமுடன் அச்சம் பயிர்ப்பெனும்
நால்வகைக் குணனொடு மால்கொள் பொற்பும்
ஒன்றாய்த் திரண்ட ஒருவடி வினளாய்,
மாமிமா மர்முதல் வாய்த்தசுற் றத்தவர்
எவர்க்கும் இதம்செய் திதம்களிப் பவளாய், ௪௰
என்றும் காய்சினம் இறையும் இலாளாய்,
நன்றமை பெண்ணின் அரசிமக ராசி
என்ற வள்ளி யம்மையை யில்லாய்