பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

சாற்றுகவிகள்.

பாளையங்கோட்டை ஸ்ரீமாந் வ. சண்முகம்பிள்ளையவர்கள்

இயற்றியவை.

தேமாங் கனிகள் சிந்துபொழிற் றெய்வ நகராந் தென்னள கைப், பூமா னெங்கள் சிதம்பரவேட் புனிதை மகரா சிமனை யாள், தூமா மதியிற் சிறந்ததொரு கற்பின் பொற்பைத் தொகுத்தணியாப்,பாமா மலர்கொளொண்பாவிற் பகர்ந்தான் பல்லோர் பயனுறவே.

கடிமன் னியங்கள் கறங்கொலிபோய்க் கடவு ணாட்டின் கற்பகப்பூங்,கொடிமுன் னியங்க வரம்பையர்தங் கோல விழி யாற் குறித்தயிர்க்கு, முடிமன் நகர முயல்தவத்தான் முளைத்தோ னறிஞன் முத்தையமால், அடிமன் வெண்பா வமிழ்தமதை யாரே யயின்று தேக்கறியார்.

தன்னா யகனே தனைமதிக்கச் சார்ந்த புலவர் தாமதிக்க, என்னா யகனாம் வள்ளிநா யகனு மதிக்கு மேந்தெழில்வாய்,பொன்னா யகத்தின் புகழ்விரிக்கும் பொருவி னூற்கு யானுமென்றன்,புன்னா வதனாற் சாற்றுகவி புகறல் சிறிதும் போதாதே.

பற்றற் றொன்றே பற்றுதலிற் பதியே தானாப் பரிந்துறலின், முற்றுமறத்திற் றிறம்பாத மொய்ம்பி லானா முதுக்குறைவில் இற்கு ளமைந்தும் பக்தியன்பி லிளையாத் தகையி லினிமை யினில், வற்குன்றனைய பெரியோரில் வாழ்ந்தாள் மகிமை வரம்புற்றே.