இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஸ்ரீமாந்
வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள்
முதல் மனைவி
வள்ளியம்மை சரித்திரம்.
நூன்முகம்.
விநாயகர் வணக்கம்.
செம்பொன் மகள்நேர் சிதம்பரவேள் முன்மனைவி
அன்புவடி வானவள்ளி யம்மைதான் — இம்பர்
மகராசி யென்பவள்தன் மாண்புரைக்கத் தந்தி
முகநாதன் தாள்பணிவேன் முன்பு.
௧
சுப்பிரமணியர் வணக்கம்.
நன்னூல் இஃதெனவே நானிலமெல் லாம்புகழ
என்னூல் இனிதா யிவண்நிலவத் — தொன்னூல்
நிதம்போற்றும் சண்முகவேள் நீபமணி யெம்மான்
பதம்போற்று வேன்யான் பணிந்து.
௨
சரஸ்வதி வணக்கம்.
என்னா வதனில் இசைசேர் தமிழ்நினைக்கும்
முன்னே வரத்தொழுவேன் மொய்ம்பாக —நன்னா
மடந்தைகமழ் வெண்தா மரையாள்எம் மாண்பும்
அடைந்தவள் தன் மென்பூ அடி.
௩
}}