4
வள்ளியம்மை சரித்திரம்.
நகரச்சிறப்பு.
நந்தூர் வயல்சூழ்இந் நாடாம்மின் னாள் முகம்நேர்
செந்தூர் எனும்மாண் சிறந்தவூர் - பைந்தோகை
மாமயிலூர் வள்ளி மணாளன் மகிழ்ந்துறையுஞ்
சேமமுறும் நாளுஞ் சிறந்து.
௰௩
பொன்னகர மாதைப் புகழெழிலால் வெல்வேனென்
றிந்நகர மாதங் கெழுவதுபோல் - மின்னுமணிக்
கோபுரங்கள் மாண்போடு கோலமுறும் வானவர்தம்
மாபுரங்கீ ழாக வளர்ந்து.
௰௪
அன்னந் தனைநிகரும் ஆயிழையார் மீதுலவி
மன்னும் எழின்மா மணிமாடம் - வன்ன்
மயிலும்பைங் கிள்ளைகளும் வாகா யுலவும்
சயிலந் தனைநிகருந் தான்.
௰௫
நீராடி மேடையிலே நின்றுலவும் நேரிழையார்
சீரா உலர்த்துஞ் செழுங்கூந்தல் - காரா
உலவும் அதனிடையே உண்டாம் எழில்கார்
விலகியொளிர் மின்போலு மே.
௰௬
வார்பொருந்தும் பூண்முலையார் மாடந் தொறும் வளர்க்கும்
ஏர்பொருந்துங் கிள்ளைகளும் இன்தமிழால் - சீர்பொருந்தும்
சண்முகனே யெங்கள் சரவணப வாவென்றே
பண்ணுடனே பாடும் பயின்று.
௰௭
சுந்தரத்தால் வென்ற துகள றுபல் கேள்விசால்
மைந்தருக்குங் கோல மடவார்க்கும் -- ஐந்தணையில்
ஊடலுறும் போதங் குருவம் கரந்தனங்கன்
ஆடவரை வெல்வான் அனன்று.
௰௮