வள்ளியம்மைக்கு மணமகன் தேடுதல்.
11
வந்துதித்த வள்ளியப்ப வள்ளல் அருந்தவத்தால்
சிந்தைமகிழ்ந் தின்பஞ் சிறந்துபெற்ற—மைந்தன்
உலகநா தேந்திரன்வான் ஓங்கிப் பரவும்
அலகிலா வண்புகழானாம்.
௫௫
மன்னர் புகழும் மதியமைச்சன் நம்மீசன்
தன்னருளைப் பெற்ற தகைமையோன்—மன்னுலகாள்
கோயில் திருப்பணிகள் கோவெனவேசெய்தோன்மெய்
யாயும் அறிவுடையோன் ஆங்கு.௫௬
அன்னவன்முன் செய்த அருந்தவப்பே றும்புவியின்
மன்னறமுஞ் சேர்ந்தோர் வடிவாகி—நன்மகனா
வந்தோன் சிதம்பரமாம் வள்ளல் எவர்க்குமின்பந்
தந்தோங்குந் தன்மையினான் தான்.
௫௭
விந்தையுளோன் தம்பியர்கள் மீனாட்சி சுந்தரவேள்
சுந்தரஞ்சேர் கல்யாண சுந்தரமால்—மைந்தனது [மை
முன்வந்தாள் செந்தேன் மொழியாள்பேர் வள்ளியம்
பின்வந்தாள் மாலையம்மை பேர்.
௫௮
கல்வியொடு நெஞ்சில் கருணை மிகவுடையோன்
நல்வடிவோன் மிக்க நலமுடையோன்—தொல்புவியோர்
போற்றும் புகழுடையோன் பொய்தீர் அறனெல்லாம்
ஆற்றும் அகமுடை யோன் ஆங்கு.
௫௯
மேலோர்தங் கேண்மை மிகவுடையோன் மெய்யறிஞர்
போலே யறிவும் பொலிவுற்றோன்—சால
அவரடியே போற்றுவோன் அன்னோர் அருள்சேர்
தவமுடையோன் எஞ்ஞான்றுந் தான்.
௬௰