12
வள்ளியம்மை சரித்திரம்.
மண்ணீர் அனல்அனிலம் வானமுதல் மற்றுமாய்
நண்ணுபல தேவுமாய் ஞானமுமாய்—எண்ணரிதாய்த்
தான்விளங்கு மோர்பொருளைச் சச்சிதா நந்தத்தைத்
தான்வணங்கு வோன்மதியால் சார்ந்து.
௬௧
என்மாறி விண்மீ தெழுந்திடினும் இன்னவன்தன்
சொன்மாறான் சொல்லரியதூய்மையோன்—தன்மமிவண்
ஓங்கி வளர்வதுபோல் ஓங்குபெருஞ் செல்வமுளான்
ஈங்கிவன்நேர் ஆவான் எவன்.
௬௨
புத்தியால் மிக்க புகழ்செய்யும் நல்வக்கீல்
உத்தியோ கந்தான் உடையவனாம்—சித்தம்
கலங்காதெக் கேசுங் கருத்துடனே பேசி
வெலுந்திறலோன் நூலால் விரைந்து.
௬௩
எம்மரபி லேயும் இசைமிகக் கொண்டுள்ள
நம்மரபி லேயும் நமக்குரிய—செம்மைசால்
சுற்றத்தில் தோன்றியஇச் சுந்தரன்மின் னுக்கேற்ற
நற்றலைவ னேயாவன் நன்கு.
௬௪
இன்னவனுக் கேநம் எழில்சேர் நலமுடைய
கன்னி யிசைவாள்நற் காதலியா—நன்மைதனை
நாடுமே நன்மைசெந்தில் நாதன் திருவருளால்
கூடுமே யின்பம் குறித்து.
௬௫
என்றிங் கிவரிசைப்ப ஏந்திழையாள் அன்னையுந்தான்
நன்றென்றே மிக்கின்பம் நண்ணினளாய்—அன்று முதல்
கந்தவேளைத்தன் கருத்துருகப் போற்றுவாள்
இந்தவகை செய்யென் றினிது.
௬௬
பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது