22
வள்ளியம்மை சரித்திரம்.
அன்பனிவண் இன்பம் அணுவளவுற் றால் சுவர்க்க
இன்பநனி யுற்றிடுவாள் இங்கவன்பால்—துன்பம்
அணுவளவுற் றால்நரகத் தார்துன்ப மெல்லாம்
நணுகியதென் றுள்மெலிவாள் நைந்து.
௱௨௧
அன்னாள் கணவன்போல் அன்போடு தன்மனையை
மன்னிவாழ்ந் தாரறியேன் மாசற்றோன்—நன்னுதலை
யேதேனுங் கூறிடினும் இன்சொலாக் கொண்டிடுவள்
கோதே யிலாதாள் குளிர்ந்து.
௱௨௨
ஆகமே பன்மையன்றி ஆன்மா இரண்டில்லை
ஏகமே யாமென்னும் இவ்வாய்மை—சோகமின்றி
இன்னவர்கள் தம்பால் இனிதறிந்திங் கெல்லாரும்
நன்மைபெற லாமே நயந்து.
௱௨௩
அன்னை சகோதரிகள் அன்பார் உறவினர்கள்
மன்னும் சகிமார்கள் மாதவத்தர்—என்னும்
இவர்களையும் தன் தலைவன் ஏற்கஎனில் ஏற்பள்
தவிர்கஎனில் நிற்பள் தவிர்த்து.
௱௨௪
மன்னுயிர்கள் போற்றும் மகராசி நாயகனைத்
தன்னுயிரென் றோம்புவாள் சந்ததமும்—தன்னுயிரும்
அன்னான் உயிர்முன் அணுவென்றே எண்ணுவாள்
என்னோ அறிஞள் இவள்.
௱௨௫
தெய்வீக முற்ற திருவள் ளுவர்க்கமைந்த
மைவிரும்புங் கண்மனைவி மானவே—மெய்வேள்
சிதம்பரம்பிள் ளைக்கில்லாள் சேர்ந்தாள்இங் கென்பர்
இதம்பெறவே யாரும் இனிது.
௱௨௬
பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது