பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறவினரை உபசரித்தமை.

25


அன்பா முகமனுரைத் தன்னவர்க்குத் தக்கவிருந்
தின்போடு செய்வாள் இனிதாக மன்புவியில்
புத்தமுதம் போல்வாளோர் போதுபோல் பல்போதும்
சித்தமொரே வாறாச் சிறந்து. ௱௩௯

தன்னா யகன் தன் சகோதரிதன் னைத்தனக்கு
முன்னே யுதித்தாளின் மும்மடங்கா —- இன்னாள்மிக்
கன்புசெய்வாள் அன்னாட் ககம்போல் நடந்தேநல்
இன்புசெய்வாள். நாளும் இசைந்து. ௱௪௰

அன்னாள் தன் கேள்வனைத்தன் அண்ணனென உட்கொண்டு
பன்னாளும் செய்திடுவள் பண்பெல்லாம் —- அன்னான்
உணவுகொளும் முன்னர் உணவுகொளாள் மாலை
நணுகிடினுங் காத்திருப்பள் நன்கு. ௱௪௧

புங்கமுட னேநற் புகழா விளங்குகின்ற
தங்குடிச்சுற் றத்தார்க்குச் சந்ததமும்—- அங்கவர் தம்
சிந்தை யுவகையுறுஞ் சீரே புரிந்திடுவாள்
எந்த இடத்தும் இவள். ௱௪௨

தன்மகிழ்நன் தாதை சகோதரியின் மைந்தனென்றே
என்னையுரை யாள்கேட்போ ரெல்லோர்க்கும்—-தன்னநுசன்
என்றே மொழிவளதற் கெண்மடங்கன் போடுமின்பா
நன்றே புரிவள் நலாள். ௱௪௩

அன்னாளும் யானும் அரியஓர் தாய்வயிற்றில்
முன்னாள் உதித்தோமோ மூதுலகில் —- என்னவோ
அப்படியோர் பண்புள்ள அன்பார் சகோதரியை
இப்படியில் காணேன் இசைந்து. ௱௪௪