26
வள்ளியம்மை சரித்திரம்.
தன்னைப் பயந்தாட்குத் தங்கையெனக் கூறாள்காண்
என்னைப் பயந்தாளை எஞ்ஞான்றும்—-அன்னை
எனக்கிவளென் றேசொல்வாள் எல்லோர்க்குங் கற்பை
தனக்கணியாக் கொண்டஇவள் தான்.
௱௪௫
பெண்மகவில் லாததொரு பெற்றியைமற் றெண்ணாதிவ்
வொண்மகளே தன்மகளென் றுன்னிநிதம்— வண்மை
யுடையாள் குணத்தால் உவந்தேயென் அன்னை
அடைவாள்பேரின்பம் அடுத்து.
௱௪௬
இன்னவளின் அன்னை இனிய சகோதரிகள்
பின்னுளபல் உற்றாரிற் பேணிமிக —- நன்மையுற
நண்பா யுபசரிப்பள் நாயகன துற்றோரை
ஒண்பாவை யன்னாள் உவந்து.
௱௪௭
மங்கலஞ்சேர் தன்மனையில் வாகாக வேபுரியும்
மங்கலநல் செய்கைதொறும் மாண்பாக —- அங்கெவர்க்கு
தானே முகமனொடு சால்புறயா வும்புரிவாள்
பானேர் மொழியாள் பரிந்து.
௱௪௮
ஒண்பொருள்மிக் குள்ளோர் வறியோரென் றுன்னாது
பண்புறுமுற் றாரையெலாம் பான்மையொடும் —- நண்பொடுமிக்
கன்போ டுபசரிப்பள் ஆன்றோர்தந் தன்மைபோல்
மென்பாவை நன்கு விழைந்து.
௱௪௯
நல்லாளை நாயகியர்க் கொண்ட இவள் நாயகனே
எல்லாத் தவமும் இயற்றினனால் —- இல்வாழ்
விவற்கே தகுமென்பார் ஈங்குளோர் யாரும்
தவத்தாள் குணம் வியந்து தான்.
௱௫௰