36
வள்ளியம்மை சரித்திரம்.
நந்தாயு மானவர்இ ராமலிங்க சாமிமுறை
கந்தனது சீர்புகலுங் காவடிநல்—சிந்துமுதல்
பாடென்றால் தன்கொழுநன் பாடுவாள் ஒவ்வொருபண்
ணோடும் வணங்கி யுவந்து.
௨௱௫
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்ணென்று—முற்காலம்
வள்ளுவர்தாஞ் சொல்வாய்மை மன்னுமாண் பிம்மகளின்
ஒள்ளியதாஞ் சீர்க்கே யுறும்.
௨௱௬
சென்னைதிரு வொற்றியூர் சீர்சேர் பலவளங்கள்
மன்னுசே ரன்பதிகள் மற்றுமுள-நன்மைசால்
நற்றலங்க ளெல்லாம் நனிமேவி நன்றாற்றிப்
பெற்றனள்காண் நல்ல பெயர்.
௨௱௭
இன்னவளின் மாண்புரைக்க எங்கம்பர் தாசரன்றிப்
பின்னவரில் யார்அருகர் பேசுங்கால்—நங்கை
இசைபடர்ந்த ஆழிசூழ் இவ்வுலகி லேயெண்
திசைபடர்ந்த தன்றோ சிறந்து.
௨௱௮
ஐயிருநூ றோடறுபத் தொன்பதாம் ஆண்டினிலிச்
செய்யிழைதான் உற்றாள் திருமணமே—ஐயிரண்ட
தாகும்நூ றோடெழுபத் தாறாண் டதுதனிலே
சோகக் கடலுள்ளே தோய்ந்து.
௨௱௯
பூவுலகுள் ளோரெவரும் புண்ணியமுந் தாம்வருந்த
மூவுலகில் மிக்க மொழியமரர்—மாவுலகம்
சேர்ந்தாளிந் நன்மாது சீர்சேர் விதிவலிமை
சார்ந்தே மகிழ்வோடு தான்.
௨௱௰
பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது