சிதம்பரம்பிள்ளை யவர்கள் பா
39
வள்ளுவர் குறளை வளனுறப் படித்துக்
கொள்ளும் விதத்தில் கூறுவள் உரையுடன்
அறிவே வடிவாய் அமைந்திவண் நின்று
செறிபேர் இன்பம் சிறக்க அளிக்கும்
வள்ளிநா யகமொடும் மற்றும் மறைகளைத்
தெள்ளிய உணர்ந்த திறத்தின ரொடும்நான்
பிரம நிலையினைப் பேசி விசாரணை
புரியுங் காலைப் புறத்தில் நின்று
சொன்னவை யெல்லாம் துரிசறக் கேட்டுப்
பின்னவை யென்னொடு பெட்புற வினாவுவள்.
௩௰
பலருட னிருந்து பருகும் பொழுதப்
பலரும் அறியாப் பதத்திலும் மறைத்தும்
நானும் வள்ளி நாயகமும் நவில்வன
தானும் உணர்ந்து தனக்குள் நகுவள்.
சிவத்தை யுணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவத்தால் என்இலம் தங்கப் பெற்றேன்.
ஊனக் கண்ணினை யொழித்தவன் நின்றதால்
தானக் குறையினைத் தவிர்த்திட ஊட்டினள்.
குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்
தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்.
௪௰
கேட்டதும் அவ்வுரை கிளர்தே சிகனை
ஓட்டிடக் கருதியான் உரமில் லாமையால்
அவளிடத் துரைக்க அடுக்களை சென்றேன்.
அவளெனைக் கண்டதும் அறைந்திடும் முன்னர்யான்
“எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!
‘எல்லாம் கடவுளா இருக்கக் கண்டும்
உருவம் முதலிய ஒன்றிலும் பேதம்