பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

"இந்நூலிற் கூறியுள்ள அருமையான பொருள்களை யான் இனிதுணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை இக்காலத்திய கருத்துக்களால் மணப்படுத்தி அற்பக் கல்வியுடையாரும் உணரத்தக்கவாறு செய்யலாமென்பதை இந்நூல் காட்டுகின்றது." — பிரஹ்மஸ்ரீ. ச. இராஜசோபாலச்சாரியாரவர்கள், ஹைக்கோர்ட்டு வக்கில், சேலம்.

"மெய்யறம்' என்னும் நூலைப் படித்தேன், இதற்கு 'மெய்யறம்' என்ற பெயர் முற்றிலும் தகும். ஸ்ரீலஸ்ரீ சகஜாநந்த சுவாமி அவர்கள் 'வள்ளுவ ரெல்லையிம் மறைக்கு மெல்லையாம்' என்று சிறப்புப் பாயிரத்திற் கூறியது பூரண பொருத்த முடையதே. ஆசிரம் நான்கையும், புருஷார்த்தம் நான்கையும் சுருக்கித் தெளிவுறப் போதிக்கும் சற்குருவென்றே இந்நூலைச் சொல்லலாம். இதன் வாக்கும், போக்கும், யாப்பும், பொருளும் சுற்றோர் வியக்குக் காட்சியாக விளங்குகின்ற. இது பன்னூற் படித்துத் தடுமாறச்செய்யும் ஐயப்பாடுகளை அறவே யொழித்து உண்மையினுட்பட்ட நீதியொன்றனையே எடுத்துக்காட்டும் இயல்பிற்று. இதனைத் தமிழின் தெளிவும், அறத்தின் தெளிவும், அறிவின் தெளிவுமென்றே கூறவேண்டும், இதனைத் தமிழுலகத் தற்குத்தத்து பேருபகாரம் செய்த ஸ்ரீமாந் பிள்ளையவர்களுக்குத் தமிழுலகம் என்றும் கைமாறியற்ற இயலாது. இவர்கள் எண்ணிய கருமத்தை இறைவன் இனிது முடித்துத் தமிழுலகத்தை யுய்யச் செய்வானாக.”—ஸ்ரீமாந் த. வேதியப்பிள்ளையவர்கள், கிம்பர்லே, தென் ஆபிரிக்கா.

“ தமிழுலகஞ் செய்த பெரும் தவப்பயனாய் வந்துதித்த தகைமையோனே, அமிழ்தெனநீ யளித்துவரு மரியபெரு நன்னூல்க ளனைத்தும்பார்த்தேன், இமிழ்திரைமா ஞாலத்தி லிதுவன்றா மெய்யறமென் றும்பூதுற்றேன், கமழ்தருபூ மாலை புனை சிதம்பரப்பேர்க் காவலனே களித்துவாழி.

" செய்யறங்கொள் சிதம்பரப்பேர்ச் சீமானே நீசெய்த சிறந்த நூலை, மெய்யறநன் னூலென்றே விளம்பிடுவர் மேலோர்கள் மேன்மையில்லாப், பொய்யறநன் னூலொன்று போதித்தா யெனப்புகல்வேன் புகறல்பொய்யோ, நெய்யறங்கொள் வள்ளுவர்போல் நேரறங்கொள் நேயாநீ நிகழ்த்துவாயே.