பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எ. உலகநாதபிள்ளை யவர்கள் கடிதம்.

45

மாக இருக்கின்றோம். மூன்றுமாதகாலத்திற்குள் பாளையங்கோட்டைக்குத் திரும்பிவருவோமென்று நினைக் கிறோம். இந்த நிரூபம் நல்ல சமயத்தில் தங்கள்பால் வந்து சேருமென்ற நம்பிக்கை கொண்டும், தங்களிடம் மிகுந்த ஆழ்ந்த அனுதாபத்தைக் கொண்டு மிருக்கிற,

உதகமண்டலம், தங்களுண்மையான,

ஜூலை 6, 1901. (ஒப்பம்) இடா. பி. ஈவர்ஸ்.”

—————————

திருச்செந்தூரில் ரெவினியு இன்ஸ்பெக்டரா

யிருந்து காலம் சென்று போன ஸ்ரீமாந் எ. உலகநாத

பிள்ளையவர்கள் கடிதம்.

“எனது அன்புள்ள நண்பரவர்களே,

உங்கள் பிராணநாயகி மகாராசியம்மாளவர்களின் அகால மாணச் சமாசாரத்தைக் கேள்வியுற்று யான் அளவு கடந்து துக்கிக்கின்றேன். இச்சமாசாரம் உண்மையாக ஓர் இடியைப்போன்று வந்து என்னைத் தாக் கிற்று. உங்கள் கார்டும் நேற்று வந்தது. யான் ஒரு சில தினங்களுக்குமுன் ஓட்டப்பிடாரத்தில் பார்த்தபோது பூரண ஆரோக்கிய சரீரத்தைக் கொண்டிருந்த அப்பெண் சிரோமணியவர்கள் இன்று உயிர் துறந்து விட்டார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவர்களது இல்லறச்சன்மார்க்கங்களைக் குறித்து நீங்கள் உங்கள் சினேகிதர்களிடத்தில் புகழ்ந்து பேசுவதைக் கேட்டிருக்கின்றேன். யான் அவர்களை நேரில் அறிந்ததினின்றும் அவர்கள் பல நற்குணங்களும் கற்பிலக்கணங்களும் நிரம்பப்பெற்ற பெண்ணரசியவர்களே