பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நூற்புறம்.

நினைக்கப்பயங்கர மாயிருக்கின்றது. இச்சம்பவம் உண்மையென்று எங்களுக்குத் தோன்றவில்லை. அவர்கள் உண்மையாக உயிரிழந்து விட்டார்கள் என்ற விஷயத்தில் நாங்கள் எங்களை நம்பமுடியவில்லை. இந்தத் துக்க சம்பவத்தை நினைக்க உண்மையில் மிக வருத்தமாயிருக் கின்றது. எனது மனைவியும் குழந்தைகளும் அவர்களை மிகவும் அதிகமாக நேசித்து அவர்கள் மீது மிகுந்த அன்பு பாராட்டினார்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி புரிய யான் பக்கத்தில் இல்லாமற் போய்விட்டேனே யென்று மனம் வருந்துகிறேன். ஆயினும், அவர்கள் பிராணனைக் காப்பாற்றுவதற்காக மனிதர் செய்யக்கூடிய ஒவ்வொரு முயற்சியும் செய்யப்பட்டிருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். ஆனால், கடவுள் தமது அகண்ட ஞானத்தில் வேறுவிதமாக விரும்பியிருக்கிறார். அவர் இஷ்டப்படி நடக்கட்டும்; அழிந்து போகத்தக்க எழைகளாகிய நாம் என்ன செய்யக்கூடும்? நீங்கள் எவ்வாறு இத்துக்கத்தைச் சகிப்பீர்களென்று எங்களுக்குத்தெரியவில்லை. நாங்களே அவர்களை இழந்த துக்கத்தைப் பொறுக்கமுடியாமலும் மனச்சமாதானத்தை அடையமுடியாமலும் வருந்துகிறோம். ஆயினும், மாற்றமுடியாத கடவுளின் ஆக்ஞைப்படி நிகழ்ந்த சம்பவத்தை மறக்க முயலுங்கள். நாங்கள் உங்கள் மீது பூரண அநுதாபத்தைக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சுகம்பெறக் கடவுளைத் தொழுது பிரார்த்திக்கிறோம்.

திருச்செந்தூர், தங்களின் மிகுந்த அன்புள்ள,

ஜூன் 22, 1901. (ஒப்பம்) ஆர். ஏ. பீட்டா.”