திருநெல்வேலி பேட்டை ஹாஸ்பிற்றல் சப் அஸிஸ்
டண்டு சர்ஜன் ம-௱-௱-ஸ்ரீ டி. எட்வர்டு பிள்ளையவர்கள்
கடிதம்.
என தன்பார்ந்த சகோதரரவர்களே,
திருக்கரங்குடிக்குப் போய் அங்கிருந்து திரும்ப வந்த உங்கள் கார்டு ஒரு பேரிடிபோன்று என் மனைவியையும் என்னையும் தாக்கிற்று. அவர்கள் நோயாயிருந்தார்க ளென்பதே எங்களுக்குத் தெரியாது. அவர்களுக்கென்ன வியாதி நேர்ந்தது? உங்களுடைய இத்துக்கத்தில் எங்களுடைய உண்மையான அநுதாபத்தை நீங்களும் உங்கள் பெற்றோரும் அங்கீகரிப்பீர் களாக. கடவுள் உங்களுக்குப் பெரிய நஷ்டத்தைக் கொடுத்துவிட்டார். உங்கள் மனைவியவர்கள் உங்கள் குடும்பத்திற்கு ஓர் ஆபரணமாயிருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆதலால் உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவர்கள் பிரிவால் அருந்துயருள் ஆழ்வார்கள். ஐயோ! அவர்கள் இறந்து விட்டார்கள் என்று என்னால் நம்பமுடியவில்லையே. உங்கள் மீது உண்மையான அநுதாபம் கொண்டுள்ள,
பேட்டை, திருநெல்வேலி உங்கள் அன்பன்,
26-6-1901 (ஒப்பம்) டி. எட்வர்டு.
——————