பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

நூற்புறம்.

கொள்ளுங்கள்; கடவுள் ஆக்ஞை நாமெல்லோரும் இப்படிப்பட்ட கஷ்டங்கள் அனுபவிக்கவேண்டும் என்றிருப்பதால் கழிந்த காரியத்தைப்பற்றி வியாகூலப்படாதீர்கள். என் மனைவி வியாதியுற்றுப் பத்தமடையி லிருக்கிறாள்.

சிவகாசி, தங்கள் அன்புள்ள,

3-8-1901. (ஒப்பம்)கே. இராமசுப்பிரமணிய அய்யர்.

——————


திருநெல்வேலி நூரல் இஸ்லாம்பிரஸ் அதிபர் ம-௱-௱-ஸ்ரீ.

கெ. யம். அப்துல் காதர் அவர்கள் கடிதம்.

அன்புள் ஐயா, உங்கள் மனைவியவர்கள் தேக வியோக மடைந்த துக்ககரமான சமாசாரத்தை மிகுந்த மன வியாகூலத்தோடு கேள்விப்பட்டேன். நமக்கு இடுக்கண் வந்துற்ற காலங்களில் நம்மனத்தைக் குளிரச்செய்வன. “உலகம் முழுவதும் ஒரு நாடகசாலை” “துன்பம் என்பது வேடம் மாறிய இன்பம்.” என்னும் ஆன்றோர் வசனங்களே, தங்களுடைய எதிர்கால சுகத்தின் நிமித்தம் சுடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.

திருநெல்வேலி, தங்களுண்மையுள்ள,

ஜூன் 20, '01 (ஒப்பம்) கெ. யம். அப்துல் காதர்.

———————