பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அரும்பதவுரை

xiv-29 அவமே-வீணே. xiv-35 நினையாவும் - நினைத்த அனைத்தையும். xiv-35 அங்ஙன் இயற்றி- நினைத்தபடியே செய்து xiv-36 பயிர்ப்பு அருவருப்பு xiv-37 மால்கொள்பொற்பும் - மயக்கத்தைக் கொள்ளத்தக்க அழகும் xiv-40 இதம் செய்து - நன்மையைச் செய்து xiv-40 இதம் களிப்பவளாய் மனம் சந்தோஷிப்பவளாய். xiv-41 காய்சினம் - வருத்தும் மகன். xiv-41 இறையும் -அணுவளவும். xiv-43 இல்லாய் மனைவியாய். xv-44 வாய்க்க-பொருந்த. xv - 44 மாத்தகை - பெருந்தகைமையுள்ள. xv-45 வேள் - ஆண்மகன். xv- 46 மகிழா- மகிழ்ந்து. xv-48 ஒண்பா -ஒள்ளியபா- வெண்பா. xv-49. அளகை-தென் அளகை நகா் - ஒட்டப்பிடாரம் xv-50 முடிமன் - கீழமுடிமன் xv-51 நிறீஇ-நிறுத்தி. XV-55 ஊனம் ஆர் - குற்றம்


xv-56 மன்னாது அகற்ற - பொருந்தாது விலக்க. Xv - 56 மால் - பெருமாள். xvi- 1 தே - தித்திப்புள்ள, xvi.1 சிந்து - உதிர்க்கின்ற. xvi-1 பொழில்-சோலையையுடைய xvi-2 பூமான் - புமான் - ஆண்மகன் xvi-2 புனிதை - நற்குணமுடையவள். xvi- 3 மனையாள் - மனைவி. xvi-3 தூ - சுத்தமுள்ள xvi-3 - மாமதியின - பொிய மதியினும் xvi-3 பொற்பை-சிறப்பை. xvi-3 தொகுத்து - சுருக்கி. xvi-3 அணியா-அழகாக. xvi- 4 பாமா- செய்யுளாகிய சிறந்த. xvi-5 கடிமன் இயங்கள் - கலியாணங்களில் இடைவிடாது முழங்குகின்ற வாச்சியங்கள். xvi-5 கறங்கு - ஒலிக்கின்ற xvi-5 கடவுள் நாட்டின் - தேவநாட்டின். xvi-6 இயங்க -ஒலிக்க. xvi-6 அரம்பையர் தெய்வப் பெண்கள் xvi-6 கோலவிழி - மையிட் பொருந்திய.




.

55