பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




நினைப்பும் நிலைமையும்.

களும் மனோதத்துவங்களும், தனது ஒழுக்கத்தையும் நிலைமையையும் விதியையும் எங்ஙனம் உருப்படுத்துகின்றன என்பதை நாளுக்குநாள் நன்றாகச் சூட்சுமித்தறிகிறான்.

நினைப்பும் ஒழுக்கமும் ஒன்றே; ஒழுக்கம் நிலைமையின் மூலமாகவும் சந்தர்ப்பத்தின் மூலமாகவுமே வெளிப்படக்கூடுமாதலால், ஒரு மனிதனது புறநிலைமைகள் அவனுடைய அகநிலமைகட்கு எப்பொழுதும் ஒத்தே யிருக்கும். இதனால் ஒரு மனிதனுடைய ஒரு கால நிலைமைகள் அவனுடைய எல்லா ஒழுக்கங்களையும் காட்டுமென்று கொள்ளலாகாது; அந்நிலைமைகள் அவனுடைய அபிவிர்த்திக்கு அக்காலத்தில் இன்றி யமையாதனவாக அவனுடைய சில முக்கிய நினைப்புக்களோடு நெருங்கிய சம்பந்தம் உடையனவா யிருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் தனது ஜீவநியதிப்படி தான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறான். எந்த நினைப்புக்களால் அவனுடைய ஒழுக்கத்தை உண்டாக்கிக் கொண்டானோ, அந்த நினைப்புக்களே அவனை அந்த இடத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றன. அவன் வாழ்க்கையில் எதுவும் தானே உண்டான செயல் என்பது கிடையாது; எல்லாம் ஒருபொழுதும் பிசகாத ஒரு நியதியின் காரியமாகவே நடக்கின்றன. இவ்வுண்மை தங்கள் நிலைமைகளில் மனத்திருப்தி உடையார்க்கும் இல்லார்க்கும் ஒரே விதமாகப் பொருந்தும். மனி

23