பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




மனம் போல வாழ்வு.

தன் நாளுக்குனான் பரிணமித்து விடுத்தியாகின்ற பியணியானதால், மனிதன் கற்றற்கும் விர்த்தியாதற்கும் உரிய நிலைமையில் இருக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தால் அவன் பெறலான ஆன்ம போதத்தை அவன் கற்றதும், அது நீங்கி வேறு சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.

தான் புறநிலைமைகளுக்கு உட்பட்டவனென்று எவ்வளவு காலம் நம்பிக்கொண்டிருக்கிறானோ, அவ்வளவு காலமும் மனிதன் புறநிலைமைகளால் மொத்துண்டுதிரிகிறான் ; ஆனால், தான் சிருஷ்டிசெய்யும் ஓர் சக்தியென்றும், நிலைமைகள் உண்டாவதற்குக் காரணமான நிலமும் வித்துக்களுமாகிய அந்தக்கரணத்தைத்தான் அடக்கியாளலாமென்றும், எப்பொழுது அவன் உணர்கின்றானோ, அப்பொழுதே அவன் தனக்கு நியாயமான தலைவனாகின்றான். தன்னை அடக்கியாள்தலையும் தன்னைப் பரிசுத்தப்படுத்தலையும் சிறிது காலமாவது அப்பியசித்துவந்த ஒவ்வொரு மனிதனும், நினைப்பிலிருந்து நிலைமைகள் வளர்கின்றன என்பதைத் தெரிவான்; ஏனெனில், தனது அகநிலைமைகள் எவ்வளவுக்கு எவ்வளவு மாறுபட்டனவோ அவ்வளவுக்கு அவ்வளவு தனது புறநிலைமைகளும் மாறுபட அவன் கண்டிருபபான். தனது ஒழுக்கத்திலுள்ள குறைகளை நீக்குதற்காக உண்மையுடன் முயற்சிசெய்து விரைவாகவும் விசேஷமாகவும் விர்த்தியாகுங் காலையில் மனிதன் ஒன்றன் பின் ஒன்றாகப் பல நிலைபைகளை அடைகின்றான்.

24