பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் போல வாழ்வு.

கோரிக்கைகளையும் (பரிசுத்தமற்ற பாவனைகளாகிய கொள்ளிவாய்ப் பிசாசுகளையோ அல்லது உறுதியான உயர்த்த முயற்சியாகிய இராஜபாட்டையையோ) பின் பற்றிச் சென்று, முடிவில் அவற்றின் பலன்களைத் தனது புறநிலைமைகளில் அடைகின்றான். வளர்ச்சிக்கும் திருத்தத்திற்கு முரிய நியதிகள் எவ்விடத்தும் உள்ளன.

ஒருவன் கள்ளுக்கடையையோ சிறைச்சாலையையோ அடைவது ஊழின் அல்லது சந்தர்ப்பத்தின் கொடுமையால் அன்று; ஈனமான நினைப்புக்களும் இழிவான அவாக்களுமே அவனை அவ்விடங்களில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. பரிசுத்த மனத்தையுடைய ஒருவன் குற்றத்திற்கு ஆளாதல் அவனுக்குப் புறத்திலுள்ள எச்சக்தியின் வலியாலும் அன்று ; குற்ற நினைப்பு நீடித்தகாலம் அவனது மனத்தில் அந்தரங்கமாகப் பரிபாலிக்கப்பட்டு வந்தது; சந்தர்ப்பம் அந்நினைப்பின் மொத்த சக்தியையும் வெளிப்படுத்திற்று. சந்தர்ப்பம் மனிதனை உண்டுபண்ணுகிறதில்லை ; அஃது அவனை அவனுக்குத் தெரிவிக்கின்றது. பாவ நினைப்புக்கள் இல்லாமல் பாவங்களைப் புரிதலும், அதன் பலன் களாகிய துன்பங்களை அநுபவித்தலும் இல்லை; அவ்வாறே, புண்ணிய நினைப்புக்கள் இல்லாமல் புண்ணியன்களைப் புரிதலும், அவற்றின் பலன்களாகிய இன்பங்களை அநுபவித்தலும் இல்லை. மனிதன் தன் நினைப்புக்குத்

26