மனம் போல வாழ்வு
வெறுக்கமாட்டான். தனது இயற்கைக்கு மாறுபட்ட அரிய உணவுகளை உண்ணவும் வேண்டும், ஆரோக்கியமாக இருக்கவும் வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அத்தகைய மனிதன் ஆரோக்கியமா இருப்பதற்கு ஒரு சிறிதும் அருகன் அல்லன், ஆரோக்கிய வாழ்க்கைக்குரிய முதல்பாடத்தையும் இன்னும் கல்லாதவனாதலால்.
இதோ! கூலியாட்களுக்கு விதித்துள்ள வீதப்படி கூலி கொடாமல் தவிர்ப்பதற்குப் பல நெளிவான உபாயங்களைச் செய்துகொண்டும், அதிக லாபத்தை அடையலாமென்ற எண்ணத்தோடு தன்னிடம் வேலைசெய்கிற ஆட்களின் கூலிகளைக் குறைத்துக்கொண்டும் வருகின்ற எஜமான் ஒருவன் இருக்கிறான். அவன் செல்வவானாவதற்குச் சிறிதும் தகுதியுடையவன் அல்லன்; பின்னர் அவன் செல்வமும் புகழும் இழந்து கடன் காரனானபோது, தன்னிலைமைக்குத் தானே காரணன் என்பதை உணராது, நிலைமைகளைக் குறைகூறுகிறான்.
தனது நிலைமைகளுக்குத் தானே காரணமென்ற உண்மையையும், தான் புறத்தில் ஒரு நல்ல காரியத்தைக் கருதி முயற்சிக்கின்ற காலையில் தனது அகத்தில் அக்காரியத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாத நினைப்புக்களுக்கும் அவாக்களுக்கும் இடங்கொடுத்துத் தனது காரிய சித்தியை இடைவிடாது கெடுத்துக் கொண்டிருக்கிறானென்ற உண்மையையும் விளக்கு
30