பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் நிலைமையும்.

தற்கு உதாரணங்களாக இம்மூன்று விஷயங்களையும் கூறினேன். இவ்வித உதாரணங்கள் எத்தனையோ இன்னும் கூறலாம்; ஆயினும், அஃது ஆவசியக மன்று. ஏனெனில், இதனைப் படிப்பவர் துணிவுகொண்டால், தமது மனத்திலும் வாழ்க்கையிலும் நேரிடும் மாறுதல் களுக்கெல்லாம் நினைப்பின் தத்துவங்களே காரணமென்று ஆராய்ந்தறியலாம். இவ்வாறு அறியும் வரையில் வெளிவிஷயங்கள் மாத்திரம் விசாரணைக்கு ஆதாரமாக மாட்டா.

ஒருவனது ஆன்ம நிலைமை முழுவதையும், அவன் அறிந்திருந்தபோதிலும், மற்றொருவன் அவனது வாழ்க்கையின் புறத்தோற்றத்தால் மாத்திரமே அறிவது முடியாது. ஏனெனில், நிலைமைகள் சன்னல் பின்னலாகப் பிணைந்தும், நினைப்புக்கள் ஆழ்ந்து வேரூன்றியும், சுகத்திற்குரிய நிலைமைகள் ஒவ்வொருவனுக்கும் வெவ்வேறாகவும் இருக்கின்றன. ஒரு மனிதன் சில விஷயங்களில் யோக்கியதை யுள்ளவனாக இருக்கலாம்; அப்படியிருந்தும் அவன் பல கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கலாம். மற்றொரு மனிதன் சில விஷயங்களில் அயோக்கியதையுள்ளவனாக இருக்கலாம்; அப்படியிருந்தும் அவன் மிகுதியான பணத்தைச் சம்பாதிக்கலாம். ஆனால், முந்திய மனிதன் குறிப்பிட்ட ஒரு யோக்கியதையினால் கஷ்ட நஷ்டப்படுகிறானென்றும், பிந்திய மனிதன் அவனது குறிப்பிட்ட ஓர் அயோக்

31