பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் போல வாழ்வு

தினை அறுப்பதும் வினைவிதைத்தவன் வினையறுப்பது மன்றி வேறில்லையே. மனிதர் இந்நியதியை ஸ்தூல உலகத்தில் கண்டு அதனை அநுசரித்து நடக்கின்றனர்;, ஆனால், சூக்ஷ்மமாகிய மனோ உலகத்தின்கண்ணும் ஒழுக்க உலகத்தின்கண்ணும் (அங்கும் இந்நியதி எளிதில் உணரத்தக்கதாகவும் மாறுபடாததாகவும் இருந்தும்) இந்நியதியைக் கண்டுணர்பவர் மிகச் சிலரே ; ஆதவின், மனிதர் அதனோடு கூடி ஒத்துநடப்பதில்லை.

துன்பம் எவ்வழியிலாவது பிசகாகக் கொண்ட நினைப்பின் காரியமே. அஃது ஒருவன் தன்னோடும் தனது ஜீவ நியதியோடும் ஒத்து நடவாமையை உணர்த்தும் ஓர் அறிகுறி. துன்பத்தால் உண்டாகும் முக்கிய பிரயோஜனம், மனிதனிடத்திலுள்ள அப்பிரயோஜனமும் அசுத்தமுமான எல்லாவற்றையும் எரித்து அவனைச் சுத்தப்படுத்துவதேயாம். எவன் பரிசுத்தனாயிருக்கிறானோ அவனுக்குத் துன்பமென்பதே கிடையாது. களிம்பு நீங்கியபின் தங்கத்தைப் புடம்போட யாதொரு காரணமும் இல்லை ; அது போலவே, பூரண பரிசுத்தத்தையும் ஞானத்தையும் அடைந்தவன் துன்ப மடைய யாதொரு காரணமும் இல்லை.

ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்ற நிலைமைகள் அவனது மனத்தின்கண்ணுள்ள நேர்மையின்மையின் பலன்கள்; ஒருவனுக்கு இன்பத்தைக்கொடுக்கின்ற நிலைமைகள் அவன் மனத்தின்கண்

34