பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் போல வாழ்வு.

சாட்டுதலும் தாக்குதலுமாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் துன்பமுறுதலும் தாக்கப்படுதலுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பலவித சுயநய நினைப்புக்களும் சுயலாபத்தை நாடும் பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் கொஞ்சம் ஏறக்குறையக் கஷ்டங்களை உண்டாக்கும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. ஆனால், பலவகை நல்ல நினைப்புக்களும் அன்புசெலுத்துதலும் அருள்புரிதலுமாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் மனோகரமும் குதூகலமுமான நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. பரிசுத்த நினைப்புக்கள் மிதமாக அநுபவித்தலும் தன்னை யடக்கியாளுதலுமாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் சாந்தமும் சமாதானமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. தைரியமும் தன்பொறுப்பும் திடமும் பொருந்திய நினைப்புக்கள் ஆண்மைக்குரிய பல பழக்கங்களாகின்றன; அப்பழக்கங்கள் வெற்றியும் நிறைவும் சுவாதீனமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. ஊக்க நினைப்புக்கள் சுத்தமும் உழைப்பு மாகிய பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் இன்பத்தைத் தரும் நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. மென்மையும் பொறுமையும் பொருந்திய நினைப்புக்கள் சாந்தமான பழக்கங்களாகின்றன ; அப்பழக்கங்கள் காப்பையும் வாழ்வையும் நல்குகின்ற நிலைமைகளின் உருக்களை அடைகின்றன. அன்பும் பரோபகாரமும் பொருந்திய

38