பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் நிலைமையும்.

சினைப்புக்கள் மற்றவர்க்காகத் தன்னை மறக்கும் பழக்கமாகின்றன ; அப்பழக்கம் நிலைவரமான சீரும் செல்வமுமாகிய நிலைமைகளின் உருக்களை அடைகின்றது.

விடாப்பிடியாய்க் கொண்டுள்ள ஒருவகை நினைப்பின் தொடர், அது நல்லதாயினும் கெட்டதாயினும், தனது பலன்களை மனிதனது ஒழுக்கத்திலும் நிலைமைகளிலும் உண்டுபண்ணாமல் போகாது. ஒருவன் விரும்புகின்ற நிலைமைகளை நேராகக் கொள்ள முடியாது, ஆனால், அவற்றை அளிக்கத்தக்க நினைப்புக்களைக் கைக்கொண்டு, அவற்றின் மூலமாக அந்நிலைமைகளை நிச்சயமாக ஆக்கிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனும் மிகுதியாகப் பேணிவருகின்ற நினைப்புக்கள் நிறைவேறுதற்குப் பிரகிருதி உத விபுரிகின்றது ; அன்றியும், அது நல்ல நினைப்புக்களையும் கெட்ட நினைப்புக்களையும் விரைவில் வெளிப்படுத்தத்தக்க சந்தர்ப்பங்களையும் உண்டுபண்ணுகின்றது.

ஒருவன் தனது பாவ நினைப்புக்களைத் தவிர்த்து விட்டால், உடனே உலகம் முழுவதும் அவனிடத்துப் பிரியமுடையதாகி அவனுக்கு உதவிபுரிய முன்வரும். ஒருவன், பலஹீனமாய்க் கேவலமான தனது நினைப்புக்களை ஒழித்துவிட்டால், உடனே அவனது உறுதியான நியமனங்களை நிறைவேற்றப் பல பக்கங்களிலும் சந்தர்ப்பங்கள் உற்பவிக்கும், ஒருவன் நல்ல நினைப்புக்களைப் பேணிவந்தால், துன்பத்தையும் அவமா

39