பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும்

மனம் ஆண்டான் : சரீரம் அடிமை. முன்னாலோ சனையோடாவது தன்னியல்பிலாவது மனம் கொள்கின்ற நினைப்புக்களை ஒட்டியே சரீரம் நடக்கின்றது. தீய நினைப்புக்களாலும் விசன நினைப்புகளாலும் சரீரம் பிணியையும் அழிவையும் விரைவில் அடைகின்றது. நல்ல நினைப்புக்களாலும் சந்தோஷ நினைப்புக்களாலும் சரீரம் யென்வனத்தையும் அழகையும் பெறுகின்றது.

வியாதியும் ஆரோக்கியமும் நிலைமைகளைப் போலவே. நினைப்பில் வேரூன்றியிருக்கின்றன. கேவல நினைப்புக்களை வியாதியுள்ள சரீரம் வெளிப்படுத்தும். அச்சத்தாலுண்டாகும் நினைப்புக்கள், மனிதனை ஒரு வெடிகுண்டு எவ்வளவு துரிதத்தில் கொல்லுமோ அவ்வளவு துரிதத்தில், கொல்லக் கண்டிருக்கிறோம். அவ்வளவு வேக மில்லாவிட்டாலும் அவை வெடிகுண்டுபோலவே அநேக மனிதர்களை இடைவிடாது கொன்றுகொண்டிருக்கின்றன. வியாதி வருமோ என்று பயப்படுகின்றவர்களே விபாதியை அடைகின்றவர்கள். மனக்கவலை, சரீரம் முழுவதிலும் விரைவில் தடுமாற்றமுண்டாக்கி, வியாதி வருவதற்கு வழிசெய்துவைக்கின்றது. பரிசுத்தமற்ற நினைப்புக்களைச் சரீரம் நிறைவேற்றாவிட்டாலும், அவை தரவு மண்டலத்தைச் சீக்கிரத்தில் தகர்த்திப் பின்னப்படுத்திவிடும்.

41