பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நினைப்பும் சரீரமும் ஆரோக்கியமும்.

கொண்டவன் பிணிப்பூச்சிகளுக்குப் பயப்படவேண்டிய நிமித்தம் இல்லை.

நீங்கள் உங்கள் சரீரத்தைப் போற்ற விரும்புவீர்களாயின், உங்கள் மனத்தைப் போற்றுங்கள்; உங்கள் சரீரத்தைப் புதுப்பிக்க விரும்புவீர்களாயின், உங்கள் மனத்தைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். பகைமையும் பொறாமையும் ஆசாபங்கமும் ஏக்கமும் பொருந்திய நினைப்புக்கள் சரீரத்தினின்றும் அதன் ஆரோக்கியத்தையும் அழகையும் பறித்துக்கொள்கின்றன. கடுகடுத்த முகம் இயற்கையாக உண்டாவ தன்று; அது கடுகடுத்த நினைப்புக்களாலேயே உண்டாகிறது. முகத்தின் அழகைக் கெடுக்கும் திரைகள் மடமையாலும் காமக்குரோதங்களாலும் கர்வத்தாலும் உண்டாகின்றன.

யான் தொண்ணூற்றாறு வயதுள்ள ஒரு ஸ்திரீயை அறிவேன்; அவளுடைய முகம் பன்னிரண்டு வயதுள்ள ஓர் பாலிகையின் முகத்தைப்போலக் குற்ற மற்றதாகவும் பிரகாசமுள்ளதாகவும் விளங்குகின்றது. யான் ஒரு யௌவன புருஷனை அறிவேன்; அவனுடைய முகம் ஓர் வயோதிகனுடைய முகத்தைப்போல மிகவும் அந்தவிகாரமாயிருக்கிறது. இவற்றில் ஒன்று பிரகாசமும் இனிமையுமுள்ள மனவிர்த்தியின் பயனாக உண்டாயிருக்கிறது; மற்றொன்று காமக்குரோதமும் அதிருப்தியு முடைய மனவிர்ததியின் பயனாக உண்டாயிருக்கிறது.

43