பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் போல வாழ்வு.

அறைகளுக்குள் காற்றும் வெளிச்சமும் எரான்மாகச் சென்றாலன்றி உங்கள் வாசஸ்தலம் இன்பத்தையும் சுகத்தையும் நல்காது, உங்கள் அகத்தின் சந்தோஷமும் நல்லெண்ணமும் சாந்தமும் பொருந்திய நினைப்புக்களைக் கொண்டாலன்றி, உங்கள் சரீரம் ஆரோக்கியமும் உரமும் பெற்றிராது: உங்கள் முகம் பிரகாசமும் அழகும் இனிமையும் பொருந்தியிராது.

வயோதிகர்களுடைய முகங்களில் இரக்கத்தால் உண்டான திரைகளும், பலமும் பரிசுத்தமும் பொருத்திய நினைப்பால் உண்டான திரைகளும், காமக்குரோதங்களால் உண்டான திரைகளும் இருக்கின்றன; இவற்றைப் பிரித்து அறியமாட்டாதார் யார்? நல்லொழுக்கத்தில் வாழ்நாளைக் கழித்தவர்களுக்கு, விருத்தாப்பியதசை, அஸ்தமிக்கும் சூரியனைப் போன்று, சாந்தமும் சமாதானமும் இனிமையும் பொருந்தியிருக்கும். யான் சில காலத்துக்கு முன்னர் ஒரு தத்துவஞானியை அவரது மரணப்படுக்கையில் பார்த்தேன்; வயது முதிர்ந்தத யன்றி, அவருக்கு விர்த்தாப்பியம் உண்டாகவில்லை; அவர் எவ்வளவு இன்பத்தோடும் சமாதானத்தோடும் வாழ்ந்திருந்தனரோ அவ்வளவு இன்பத்தோடும் சமாதானத்தோடும் இறந்தனர்.

சரீரத்தின் வியாதிகளை நீக்குவதற்கு மனஉற்சாகமுள்ள நினைப்புக்குச் சமமான வைத்தியன் இல்லை; கவலையையும் துக்கத்தையும் போக்குதற்கு நன்மனம் போன்ற நட்பு வேறில்லை. ஒருவன் பகைமையும்

44