பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நினைப்பும் காரியமும்.

நினைப்பைக் காரியத்துடன் சம்பந்தப்படுத்தினாலொழிய, விவேகமான காரியசித்தி யொன்றையும் அடைதல் முடியாது. பெரும்பாலார் வாழ்க்கையாகிய சமூத்திரத்தில் நினைப்பாகிய படகை அதன் போக்கில் விட்டுவிடுகின்றனர். இன்ன காரியத்தைச் செய்துமுடிக்க வேண்டுமென்ற இலக்கில்லாதிருத்தல் பாவமாகும்; தனக்கு அழிவும் ஆபத்தும் வராமலிருக்க விரும்புகிறவன் யாதோர் இலக்குமின்றி இருத்தல் கூடாது.

எவர் தமது வாழ்க்கையில் யாதொரு காரியத்தையும் இலக்காகக் கொள்ளா திருக்கின்றனரோ அவர் பலஹீனத்தின் அறிகுறிகளாகிய சில்லரைத் தொந்தரவுகளுக்கும் அச்சங்களுக்கும் துன்பங்களுக்கும் இரங்கல்களுக்கும் எளிதில் இரையாவர். அப்பலஹீனக் குறிகள், மனதாரச் செய்யும் பாவங்களைப்போல், எவ்விதத்திலாவது தோல்வியையும் நஷ்டத்தையும் துக்கத்தையும் வறும்படி செய்யும். ஏனெனில், பலத்தை விர்த்திசெய்துகொண்டிருக்கிற பிரபஞ்சத்தில் பலஹீனம் நீடித்து நிற்பது முடியாது.

ஒருவன் ஒரு நியாயமான காரியத்தைத் தன் ஹிருதயத்தில் குறிப்பிட்டுக்கொண்டு, அதனைச் செய்து முடிக்க முயற்சி செய்யவேண்டும். அவன் தனது நினைப்புக்களுக்கு அக்காரியத்தை உயிர்நிலையாகக் கொள்ளவேண்டும். அஃது, அவனுடைய அக்காலசுபாவத்தின் பிரகாரம், ஒரு வைதிக காரியமாகவோ

46