பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் போல வாழ்வு

விவேகத்தோடு ஜெயக்கின்றான். அவனது காவியங்களாகிய செடிகள் தக்க பருவத்தில் நடப்பட்டிருக்கின்றன். அவை மலர்ந்து வெம்பி உதிராத கனிகளைக் கொடுக்கின்றன.

காரியத்தோடு நிர்ப்பயமாகச் சேர்க்கப்பட்ட நினைப்பு சிருஷ்டி செய்யும் ஓர் சக்தியாகின்றது; எவன் இதனை அறிகிறானோ அவன் அசைந்துகொண்டிருக்கிற நினைப்புக்களும் ஓடிக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளும் சேர்த்துள்ள ஒரு வெறும் சுமையா யிராது மேன்மையும் பலமுமுள்ளவனாவான்; எவன் இதனைச் செய்கிறானோ அவன் தனது மனோசக்திகளை விவேகத்தோடும் அறிவோடும் கையாள்கிறவனாகின்றான்.

"நல்ல செய்து நரரை யுயர்த்தவும்
அல்ல செய்யதங் களற்றிடை யாழ்ப்பவும்
வல்ல திந்த மனமல தையனே
இல்லை யென்ன இயம்பும் மறையெலாம்."

50