பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் போல வாழ்வு

மனிதர் "ஒருவன் ஹிம்சிக்கிறவனா யிருக்கிறபடியால் அநேகர் அடிமைகளாயிருக்கின்றனர். நாம் தமிம் சிக்கிறவனை விரோதிப்போம்." என்று நினைப்பதும் சொல்வதும் வழக்கம். ஆனாலும், தற்காலத்தில் சிலர் (இவர்கள் தொகை நாளுக்குநாள் பெருகிவருகின்றது) இந்தக் கொள்கையைத் தவிர்த்து, "அநேக ஜனங்கள் அடிமைகளாயிருப்பதால் ஒருவன் ஹிம்சிக்கிறவனா யிருக்கிறான்: நாம் அவ்வடிமைகளை இகழ்வோமாக.' என்கிற கொள்கையை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையை நோக்குமிடத்தில் ஹிம்சிப்பவனும், அடிமையும் மடமையில் ஒருவர்க்கொருவர் உதவிபுரிகின்றனர்: அவர்கள் ஒருவரையொருவர் துன்பப்படுத்து வதாகத் தோன்றினும், அவர்கள் உண்மையில் தம்மைத் தாமே துன்பப்படுத்திக்கொள்கின்றனர். ஹிம்சிக்கப் பட்டவனது பலஹீனமும் ஹிம்சிக்கிறவனது துர்வினி யோகமான சக்தியும், நியதியின் செய்கைக்குத் துணைக் காரணமென்று மெய்யறிவு காண்கின்றது; இவ் விரண்டு நிலைமைகளாலும் உண்டாகிற துன்பத்தைப் பார்த்து மெய்யன்பு ஒன்றின்மீதும் குற்றங்காணாம லிருக்கின்றது ; ஹிம்சிக்கிறவன் ஹிம்சிக்கப்படுகிறவன் ஆகிய இருவரையும் மெய்யருள் மார்போடு அணைத் துக் கொள்கின்றது.

பலஹீனத்தை ஜயித்து சுயநய நினைப்புக்களெல் லாவற்றையும் ஒழித்துவிட்டவன் ஹிம்சிக்கிறவனை

52